என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மீனவர் தாக்குதல்
நீங்கள் தேடியது "மீனவர் தாக்குதல்"
ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் மீனவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி
ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. மீனவர். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆக்னஸ். நேற்று ஆக்னஸ் மனைவி வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ராஜா வளர்த்து வரும் நாய், ஆக்னஸ் மனைவியை தாக்கியுள்ளது.
இதில் ராஜாவுக்கும், ஆக்னசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆக்னஸ், அவரது நண்பர்களான நீரோன், தேரடிமுத்து ஆகியோருடன் சேர்ந்து ராஜாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேரடிமுத்து, நீரோன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆக்னசை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட மீனவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் நாகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). மீனவர். இவரது தங்கை புதுவையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போதும், பள்ளியை விட்டு திரும்பும் போதும் முத்தியால் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சிவசங்கர் (19) ஆகியோர் கிண்டல் செய்து வந்தனர்.
இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் நவீன்குமாரிடம் இதுபற்றி முறையிட்டார். இதனை கண்காணித்து வந்த நவீன் குமார் நேற்று மாலை கிண்டல் செய்த அந்த வாலிபர்களிடம் தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் நேற்று நவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் நவீன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து நவீன்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

×

X